தக்காளியை அடுத்து வெங்காயம்.. விலையில் சதமடித்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி..!
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தக்காளி விலை 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் தற்போது தான் தக்காளி விலை இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
இந்த நிலையில் தற்போது தக்காளியை அடுத்து வெங்காயம் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 50 முதல் 70 ரூபாய் வரை வெங்காயம் விற்றுக் கொண்டிருந்த நிலையில் இன்று சதம் அடித்துள்ளது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி சந்தையில் இன்று ஒரு கிலோ வெங்காயம் விலை 100 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் என்பது ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்பனை ஆகி வருவதாகவும் இன்னும் வெங்காயம் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே சின்ன வெங்காயத்தின் விலை 100 ரூபாயை தாண்டி உள்ள நிலையில் தற்போது பெரிய வெங்காயமும் 100 ரூபாயை எட்டி உள்ளதை அடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran