திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2020 (10:02 IST)

கொரோனா இருந்தா சுட்டு தள்ளுங்க!? – பகீர் கிளப்பும் கிம் ஜாங் உன்!

வட கொரியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களை சுட்டுக்கொல்ல அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சையான செய்திகளால் உலகம் முழுவதிலும் புகழ் பெற்றவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். சமீபத்தில் இவர் இறந்துவிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வந்த நிலையில் திடீரென பொது விழாக்களில் பங்கேற்று அதிர்ச்சி அளித்தவர். உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா பரவியுள்ள நிலையில் வட கொரியா மட்டும் தங்கள் நாட்டில் கொரோனா இல்லை என தொடர்ந்து கூறி வருகிறது.

சீனாவுடன் மிக நெருக்கமான வர்த்தக தொடர்பில் உள்ள வட கொரியாவில் கொரோனா இல்லை என்பதை உலக நாடுகள் சந்தேக கண் கொண்டு கண்காணித்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் தென் கொரியா மூலமாக வட கொரியாவிற்குள் கொரோனா பரவியுள்ளதாக கூறப்படுகிறது. வட கொரியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை சுட்டுக் கொல்லும்படி அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

அரசு அறிவிப்பில் சீனா மற்றும் தென் கொரியா எல்லைகளில் ஆட்கள் தென்பட்டாலும், நாட்டிற்குள் கொரோனா தொற்று தென்பட்டாலும் அவர்களை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன.