வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By SIVA
Last Updated : வியாழன், 3 செப்டம்பர் 2020 (08:28 IST)

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகி கொரோனாவால் மரணம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகி கொரோனாவால் மரணம்
உலகம் முழுவதும் மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தமிழகம் உள்பட இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் இந்தியா முழுவதும் 37 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனாவுக்கு அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் இவர்களில் ஒரு சிலர் சிகிச்சையின் பலன் இன்றி பலியாகி வருகின்றனர் என்பது குறித்த செய்திகளையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் தலைவர் சுப்ரமணியம் என்பவர் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
70 வயது சுப்பிரமணியம் அவர்கள் மறைவிற்கு புதுவை மாநில மக்கள் நீதி மய்யம் கட்சியின்  தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்