செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 9 டிசம்பர் 2020 (07:22 IST)

காலாண்டு தேர்வை அடுத்து அரையாண்டு தேர்வும் ரத்து!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது தெரிந்ததே
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நீடித்துக் கொண்டே இருந்ததால் இந்த கல்வி ஆண்டில் காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து டிசம்பர் மாதம் நடைபெறும் அரையாண்டுதேர்வு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது காலாண்டுதேர்வை அடுத்து அரையாண்டு தேர்வும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலாளர் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் தகவல் அனுப்பி உள்ளதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. மேலும் வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெறும் முழு ஆண்டு தேர்வு நடைபெறுமா? அல்லது கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என்று அறிவிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்