வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (10:02 IST)

இம்மாத இறுதியிலே சசிகலா விடுதலை - வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தற்போது பெங்களூர் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, விரைவில் விடுதலை ஆவார் என்று அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது பெங்களூர் சிறை நிர்வாகமே சசிகலா விடுதலை குறித்த தகவலை தெரிவித்துள்ளது

பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வரும் ஜனவரியில் விடுதலை ஆகிறார் என பெங்களூர் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா விடுதலையாவார் என பெங்களூரு நரசிம்ம மூர்த்தி என்பவர் ஆர்டிஐ மூலம் கேட்ட கேள்விக்கு சிறை நிர்வாகம் பதிலளித்துள்ளது.  

இந்நிலையில் சற்றுமுன்  சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், இம்மாத இறுதியிலேயே சசிகலா வெளியே வர வாய்ப்பு உள்ளதாக கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சசிகலா ரூபாய் 10 கோடி அபராதம் கட்டியே ஆக வேண்டும். கட்ட தவறினால் விடுதலை ஓராண்டு தள்ளிப்போகும் என்று ஆர்டி.ஐ.  தெரிவித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.