வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 30 மே 2024 (12:28 IST)

எல்.முருகன், அண்ணாமலைக்கு குமரியில் புக் செய்த அறைகள் ரத்து: பாஜக தலைமை அதிரடி உத்தரவு..!

Annamalai
பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்ய இருக்கும் நிலையில் அவரை வரவேற்க கட்சியின் நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என தமிழக பாஜகவினருக்கு டெல்லி தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது 
 
பிரதமரின் தனிப்பட்ட தியான நிகழ்வை அரசியல் கட்சி நிகழ்வாக மாற்றக்கூடாது என்று தமிழக பாஜகவனாருக்கு டெல்லி தலைமை அறிவுறுத்துள்ளது. மேலும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருக்காக குமரியில் ஏற்கனவே அறைகள் புக் செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த அறைகள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
பிரதமர் மோடி முழுக்க முழுக்க இரண்டு நாள் தனிமையில் தியானம் செய்யப் போவதாகவும் அந்த இரண்டு நாளும் அவர் விரதத்தை கடைபிடிக்க இருப்பதால் அவரை தொந்தரவு செய்யும் வகைகள் கட்சியினர் நடந்து கொள்ள வேண்டாம் என்றும் தமிழக பாஜகவினர்களுக்கு டெல்லி தலைமை அறிவுறுத்தி உள்ளது. 
 
மேலும் குமரி மாவட்ட பாஜக நிர்வாகிகள் மட்டும் காவல் துறையினருக்கு வழிகாட்டியாக இருந்தால் போதும் என்றும் மற்ற மாவட்டத்தில் இருந்து யாரும் கன்னியாகுமரிக்கு வருகை தர வேண்டாம் என்றும் டெல்லி பாஜக தலைமை அறிவுரைத்துள்ளது. 
 
Edited by Siva