ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 21 ஜூன் 2019 (22:05 IST)

ஒரே ஒரு எம்பிக்கு மக்களவை தலைவரா? அதிமுகவின் காமெடி அறிக்கை!

ஒவ்வொரு கட்சியும் மக்களவையில் வெற்றி பெற்ற எம்பிக்களில் ஒருவரை அந்த கட்சியின் மக்களவை தலைவராக தேர்வு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் திமுக மக்களவை எம்பிக்களின் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு செய்யப்பட்டார். 
 
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து ஒரே ஒரு எம்பியாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மகன் ரவீந்த்ரநாத் குமார் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு அவரே தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கடிதம் ஒன்றை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கடிதம் ஒன்றை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களுக்கு அனுப்பியுள்ளனர்.
 
இந்த கடிதத்தை குறிப்பிட்டு நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். ஒரே ஒரு எம்பி வருகிறார்' என்றும், போட்டியின்றி தலைவர் தேர்வு செய்யப்பட்டதாகவும் நெட்டிசன்கள் பதிவு செய்யும் டுவீட்டுக்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது