ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 21 ஜூன் 2019 (19:35 IST)

ராஜ்யசபா எம்பி டீலிங்: அதிமுகவில் இணைகிறார் தங்க தமிழ்ச்செல்வன்

அதிமுகவின் மாற்றாக இருப்பார் என்று கருதப்பட்ட டிடிவி தினகரனின் அமமுக கூடாரம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகி வந்த நிலையில் மக்களவை தேர்தலின் படுதோல்விக்கு பின்னர் தினகரன் மீது நம்பிக்கை வைத்திருந்த ஒருசிலரும் அவரை விட்டு விலக முடிவு செய்துவிட்டனர். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக அல்லது திமுக தான், இந்த இரண்டு கட்சிகளை தவிர வேறு கட்சிகள் எடுபடாது என்பதை புரிந்து கொண்ட டிடிவி தினகரனின் கட்சியினர் திமுக, அதிமுக என கட்சி மாற தொடங்கிவிட்டனர்.
 
இந்த நிலையில் டிடிவி தினகரனின் வலது கரமாக இருந்த தங்க தமிழ்ச்செல்வனும் அதிமுகவுக்கு செல்ல தயாராகிவிட்டார். அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்க அதிமுக தரப்பு ஒப்புக்கொண்டதால் விரைவில் அவர் முதல்வர் ஈபிஎஸ் முன் அதிமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
தங்க தமிழ்ச்செலவனை டெல்லிக்கு அனுப்பிவிட்டால் அவர் மாநில அளவில் அமைச்சர் உள்பட எந்த பதவியையும் கேட்க மாட்டார் என்பதும், டெல்லியில் தற்போது ஓபிஎஸ் செல்வாக்கு அதிகரித்து வருவதால் தங்க தமிழ்ச்செல்வனை டெல்லிக்கு அனுப்பினால் அவருக்கு செக் வைக்கும் அளவில் இருக்கும் என்பதும் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க ஈபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது