நீங்கதான் பாத்து பண்ணனும்... திமுகவிடம் காங்கிரஸ் சரண்!!

Last Updated: வியாழன், 20 ஜூன் 2019 (10:09 IST)
மன்மோகன்சிங்கை மாநிலங்கலவை உறுபினராக தமிழகத்தில் இருந்து தேர்வு செய்ய திமுகவின் உதவியை நாடியுள்ளது காங்கிரஸ். 
 
நடந்து முடிந்த தேர்தல் தமிழகத்தில் திமுக அமோக வெற்றியை பெற்றது. திமுகவின் வெற்றி தோல்வியில் சரிந்த காங்கிரஸுக்கு சற்று பலமாக இருந்தது. இந்நிலையில், மாநிலங்களவையில் திமுகவிற்கு 3 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. 
 
எனவே, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக்குவதற்காக திமுகவின் உதவியை காங்கிரஸ் எதிர்பார்க்கின்றனது. அதாவது கடந்த 30 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக அசாமில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மன்மோகனின் பதவிக்காலம் நிறைவடைந்தது. 
மீண்டும் அவரை மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸிற்கு போதிய பலம் இல்லாததால் அஸ்ஸாமில் இருந்து அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பில்லை. எனவே, தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன்சிங்கை தேர்வு செய்ய காங்கிரஸ் திமுகவிடம் கேட்டுள்ளதாம். 
 
ஆனால், இது குறித்து திமுக தரப்பில் இருந்து எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை எனவும் தகவல் கிடைத்துள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :