செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 ஜூலை 2022 (09:30 IST)

அதிமுக அலுவலகத்தில் கொள்ளையடித்த ஓபிஎஸ்? – ஈபிஎஸ் ஆதரவாளர் வழக்கு!

நேற்று ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்தை உடைத்து உள்ளே நுழைந்தது சர்ச்சையான நிலையில் இதுகுறித்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெற்ற நிலையில், ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அங்கு நடந்த கலவரங்கள் தொடர்பாக இருதரப்பிலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் என்பவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் அதிமுக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததுடன், பல பொருட்களையும் கொள்ளையடித்து சென்றதாக புகார் அளித்துள்ளார்.