வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 20 ஜூலை 2022 (14:36 IST)

ஈபிஎஸ் வசம் அதிமுக அலுவலகம்!

சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 
கடந்த 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நடைபெற்ற போது அதிமுக அலுவலகத்தை ஓபிஎஸ் கைப்பற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து காவல்துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு  சீல் வைத்தனர்.

இதனை அடுத்து அதிமுக அலுவலகத்தில் வைத்த சீலை அகற்ற வேண்டும் என பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த சில நாட்களாக விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது 

சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது. அதிமுக அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.