செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 ஜனவரி 2022 (13:25 IST)

பிரதமரை கண்டித்து அதிமுக போராட்டம் நடத்த தயார்!- அதிமுக எம்.எல்.ஏ வைத்திலிங்கம் உறுதி!

பிரதமரை கண்டித்து அதிமுக போராட்டம் நடத்த தயார்!- அதிமுக எம்.எல்.ஏ வைத்திலிங்கம் உறுதி!
நீட் தேர்வுக்கு எதிராக பிரதமரை எதிர்த்து போராடினாலும் அதிமுக துணை நிற்கும் என அதிமுக எம்.எல்.ஏ வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடந்த பல ஆண்டுகளாக பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியமைத்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று சட்டமன்ற தேர்தலில் நீட் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்ட போது நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடரும் என கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை நீட் தேர்வு ரத்து குறித்த அனைத்து கட்சி ஆலோசனை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு ஆதரவு தெரிவித்து பேசிய அதிமுக எம்.எல்.ஏ வைத்திலிங்கம், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பிரதமரை எதிர்த்து போராட்டம் நடத்தினாலும் அதற்கு அதிமுக ஆதரவு தரும் என தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணியில் உள்ள நிலையில் அதிமுக எம்.எல்.ஏ இவ்வாறு பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.