வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 2 அக்டோபர் 2018 (14:56 IST)

அதிமுக எம்.எல்.ஏ - கிரண்பேடிக்கிடையே கடும் வாக்குவாதம்: புதுவையில் பரபரப்பு

புதுவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக எம்.எல்.ஏவிற்கும் ஆளுனர் கிரண்பேடிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
புதுவையில் திறந்தவெளி கழிப்பறை இல்லாத பகுதியாக அறிவிக்கும் நிகழ்ச்சி இன்று கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. இதில் ஆளுனர் கிரண்பேடி ,அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் மற்றும் பலர் விழாவில் கலந்து கொண்டனர். 
 
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அன்பழகன் குறித்த நேரத்தில் பேச்சை நிறைவு செய்யாமல், தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருந்தார்.
 
இதனால் கோபமடைந்த கிரண்பேடி, நேராக அன்பழகன் அருகே சென்று, அவர் பேசிக் கொண்டிருந்த மைக்கின் ஸ்விட்சை ஆஃப் செய்தார். இதனால் கடும் கோபமடைந்த அன்பழகன் கிரண்பேடியிடம் காரம் சாரமாக சண்டையிட்டார். அருகிலிருந்த அமைச்சர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தனர். பின் அன்பழகன் அந்த இடத்தை விட்டு கோபமாக வெளியேறினார்.