செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 30 செப்டம்பர் 2018 (13:20 IST)

கட்சி தாவ பெண் எம்.எல்.ஏவிடம் 30 கோடி பேரம் - வெளியான அதிர்ச்சி ஆடியோ

கர்நாடகாவில் காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைய பெண் எம்.எல்.ஏவிடம் 30 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநில முதல்வராக மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த குமாரசாமியும், துணை முதல்வராக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வரரும் உள்ளனர். 
 
இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு இடையே உள்ள உட்பூசலை பெரிதாக்கி தங்களது எம்.எல்.ஏக்களை பாஜக தங்கள் பக்கம் இழுக்க நினைக்கிறது என முதலமைச்சர் குமாரசாமி குற்றம் சாட்டினார்.  இதனை பாஜகவினர் மறுத்து வந்தனர்.
 
இதனை நிரூபிக்கும் வகையில் கர்நாடக மாநில காங்கிரஸ் மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.வுமான லட்சுமி ஹெப்பான்சர், தனக்கு போன் செய்த பாஜக பிரமுகர், காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசை கவிழ்க்க வேண்டும். ஆதலால் நீங்கள் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தால் 30 கோடி பணமும், அமைச்சர் பதவியும் தருவதாக தெரிவித்தார்.
 
இதற்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன். காங்கிரஸின் விஸ்வாசி நான். பாஜகவினர் என்னிடம் பேரம் பேசிய ஆடியோ கைவசம் இருக்கிறது. இதனை மக்களிடம் போட்டுக்காட்டி அவர்களின் முகத்திரைகளை கிழித்தெறிவேன் என ஆவேசமாக பேசினார்.