செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (13:41 IST)

சசிகலாவை நீக்க 3 அமைச்சர்கள் எதிர்ப்பு - தொடரும் சிக்கல்

அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க மூன்று அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இரு அணிகள் இணைவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.


 

 
இன்று காலை ஓ.பி.எஸ் தன்னுடைய ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகம் வருவார் எனவும், அங்கு எடப்பாடி பழனிச்சாமியும், அவரும் செய்தியாளர்களை சந்தித்து அணிகள் இணைப்பு பற்றி அறிவிப்பார்கள் எனவும் கூறப்பட்டது. இதனால் ஏராளமான அதிமுக தொண்டர்கள் அங்கு குவியத் தொடங்கியுள்ளனர். 
 
அந்நிலையில், தினகரனை நீக்கியதை போல், அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கி உத்தரவிட்ட பின்புதான் நாங்கள் தலைமை அலுவலகத்திற்கு வருவோம் என ஓ.பி.எஸ் அணி திடீர் நிபந்தனை விதித்தது. அதனால் இரு அணிகளும் இன்று இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், ஓபிஎஸ் தரப்பினரிடையே எடப்பாடி அணி தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது.
 
இந்நிலையில், ஓ.பி.எஸ் அணியின் கோரிக்கையை ஏற்று சசிகலாவை நீக்கும் தீர்மானம் தயாரிக்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது. ஆனால், அவரை நீக்க எதிர்ப்பு தெரிவித்து 3 அமைச்சர்கள் தீர்மானத்தில் கையெழுத்திட மறுப்பதாக தெரிகிறது. அந்த 3 அமைச்சர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்டோர் இறங்கியுள்ளதாக தெரிகிறது.