நாட்டில் ஸ்டாலின், வீட்டில் தினகரன்; இருவரும் வில்லன்கள்: அமைச்சர் சர்ச்சை பேச்சு

<a class=MK Stalin and TTV" class="imgCont" height="417" src="//media.webdunia.com/_media/ta/img/article/2018-08/29/full/1535533545-3441.jpg" style="border: 1px solid #DDD; margin-right: 0px; float: none; z-index: 0;" title="" width="740" />
Last Updated: புதன், 29 ஆகஸ்ட் 2018 (14:36 IST)
நாட்டில் உள்ள வில்லன் ஸ்டாலின் என்றால், வீட்டில் உள்ள வில்லன் டிடிவி தினகரன் என அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் விளக்கும் வகையில் அரசு நலத்திட்ட உதவிகள் விழா நடைபெற்றது.
 
இதில் கலந்துக்கொண்டு அமைச்சர் பேசிய ஆர்.பி.உதயகுமார் ஸ்டாலின், தினகரன் இருவரையும் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
நாட்டில் உள்ள வில்லன் ஸ்டாலின் என்றால் வீட்டில் உள்ள வில்லன் டிடிவி தினகரன். ஸ்டாலின் ஆள் பிடிக்காத வில்லான். தினகரன் ஆள் பிடிக்கும் வில்லன். இவர்களிடம் கட்சியினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
 
சிக்கினால் யாரை வேண்டுமானாலும் அள்ளிக்கொண்டு செல்கிற வில்லன் தினகரன். இவர்கள் இருவரிடமும் எச்சரிக்கையாக இருந்தால்தான் இந்த நாட்டையும், தேசத்தையும் மற்றும் நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியும் என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :