வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 7 நவம்பர் 2019 (11:34 IST)

மகனால் வரும் ஆப்பை உணராத ஸ்டாலின்: வார்ன் செய்யும் ஜெயகுமார்!

மகனால் வரும் ஆப்பை உணராத ஸ்டாலின்: வார்ன் செய்யும் ஜெயகுமார்!
உதயநிதி ஸ்டாலினால் திமுகவில் பூகம்பம் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என அதிமுக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். 
 
1975 ஆம் ஆண்டு எமர்ஜென்சியின் போது மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்து தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் அதிமுக அமைச்சர் ஜெயகுமாரும் இது குறித்து பேசியுள்ளார். அமைச்சர் ஜெயகுமார் இது குறித்து கூறியது பின்வருமாறு, 
 
மிசாவின் போதுதான் ஸ்டாலின் கைதானார். ஆனால் அவர் ஏன் கைதானார் என்று தெரியவில்லை. அவரை மிசா சட்டத்தின் கீழ் யாரும் கைது செய்யவில்லை. 
மகனால் வரும் ஆப்பை உணராத ஸ்டாலின்: வார்ன் செய்யும் ஜெயகுமார்!
உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்திதான் வேலூரில் வென்றோம் என்று திமுக சொன்னது. அப்படியென்றால் இந்த 2 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தோல்விக்கு உதயநிதிதான் காரணமா? உதயநிதி ஸ்டாலின் மூலம் கட்சிக்குள் பிரச்சனை வரப்போகிறது.
 
திமுகவில் பூகம்பம் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் மனக்குழப்பத்தில் உள்ளார். அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என பேசியுள்ளார்.