திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : சனி, 15 செப்டம்பர் 2018 (19:39 IST)

திருவாரூர் அழகிரிக்கு, திருப்பரங்குன்றம் தினகரனுக்கு: இணையத்தில் பரவும் வதந்திகள்

திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தீவிரமாக உள்ளன.

ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரை அதிமுக இழந்தது போல் கருணாநிதியின் தொகுதியான திருவாரூரை இழந்துவிடக்கூடாது என திமுக அதீத முயற்சிகள் எடுத்து வருகிறது. ஆனால் திருவாரூர் தொகுதியை கைப்பற்றி தனது செல்வாக்கை நிரூபித்து ஆகவேண்டும் என்று அழகிரி வரிந்து கட்டிவருவதாக கூறப்படுகிறது.

ஆனால் வழக்கம்போல் தினகரன் முதல் ஆளாக தேர்தல் வியூகம் அமைத்து இரண்டு தொகுதிகளிலும் களத்தில் இறங்கிவிட்டார். இந்த நிலையில் நெட்டிசன்கள் எடுத்த கருத்துக்கணிப்பின்படி திருவாரூர் அழகிரிக்கு சாதகமாக இருப்பதாகவும், திருப்பரங்குன்றம் தினகரனுக்கு சாதகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. பொதுத்தேர்தலுக்கு முன்பு சுயபரிசோதனையாக இருக்கும் இந்த இடைத்தேர்தலிலும் அதிமுக, திமுக தோல்வி அடைந்தால் நிச்சயம் திராவிட ஆட்சிக்கு தமிழகத்தில் முற்றுப்புள்ளிதான் என்பதில் சந்தேகம் இல்லை.