வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (22:23 IST)

உண்ணாவிரத போராட்டத்தில் உண்ணும் இடைவேளை - வைரல் புகைப்படங்கள்

அதிமுக சார்பில் இன்று நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில், அதிமுகவினர் உணவருந்தும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
மத்திய அரசு காவிரி மேலாண்மை அமைக்காததை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
 
சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 
இந்நிலையில், அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினர் மதிய உணவருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதைக் கண்ட நெட்டிசன்கள் இதற்கு பெயர்தான் உண்ணாவிரதப் போராட்டமா? என கிண்டலடித்து வருகின்றனர்.