செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 22 ஜனவரி 2019 (16:55 IST)

யார் அந்த தமிழிசை? கடுப்பில் கண்டபடி பேசிய தம்பிதுரை

அதிமுகவும் பாஜகவும் இணக்கமாக இருந்த நிலையில் தற்போது இந்த இணக்கத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவிக்கும் கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
 
வரும் நாடளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கும் என பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், தம்பிதுரை இந்த கூட்டணி அமையாது என தெரிவித்தார். அதோடு அதிமுக அமைச்சர்கள் பாஜவிற்கு அடிமை அல்ல எனவும் தெரிவித்தார். 
 
இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தம்பிதுரையின் கருத்து அதிமுகவின் கருத்து அல்ல என்று ஒரே போடாய் போட்டார். 
இந்நிலையின் இன்று, ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஆஜாரானர். அதன் பிறகு அவர் அளித்த பேட்டியில், 
 
அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது. பாஜக தலைவர்கள் தமிழக அரசை விமர்சிக்கும் போது வாய்மூடி மௌனியாக இருக்க முடியாது. எங்கள் கட்சி குறித்து கருத்து சொல்ல தமிழிசைக்கு யார் உரிமை கொடுத்தது? யார் குறை சொன்னாலும் சொல்லட்டும் என என்னால் சும்மா இருக்க முடியாது என சற்று கடுமையாக பேசினார்.