செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 22 ஜனவரி 2019 (10:06 IST)

அஜித்தை நாங்கள் அழைக்கவில்லை: தமிழிசை பதிலடி

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்த நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களையும் பாஜகவுக்கு இழுக்கும் வகையில் தமிழிசை பேசினார்.

இந்த நிலையில் தன் மீதும் தனது ரசிகர்கள் மீதும் அரசியல் சாயம் பூசப்படுவதை அறிந்த அஜித், அறிக்கை ஒன்றில் வெளியிட்டு அதில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவான விளக்கத்தை அளித்தார். இதனால் பாஜகவில் சேர்ந்த அஜித் ரசிகர்கள் விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழிசையின் அஜித் இணைப்பு கனவு ஒரே நாளில் பொய்த்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களும் உலா வந்தன.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை இதுகுறித்து கூறியபோது, 'அஜித் தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் 'பாஜகவில் இணைந்து கொள்ள அஜித்தை நாங்கள் அழைக்கவில்லை என்றும் தெரிவித்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.