திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 18 ஆகஸ்ட் 2018 (08:08 IST)

அதிமுக செயற்குழு கூட்டம் திடீர் ஒத்தி வைப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்திருந்தனர்.
 
இந்த நிலையில் இந்த செயற்குழு கூட்டம் எதிர்பாராத வகையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக செயற்குழு கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் 23ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
 
சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக்கழகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு கழக செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழுடன் வரவேண்டும் என்றும் அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.