1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (11:47 IST)

அதிமுக தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனை: முதல்வர் வேட்பாளர் பிரச்சனை குறித்து விவாதமா?

கடந்த சில நாட்களாக அதிமுக தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இடையே முதல்வர் வேட்பாளர் குறித்த வாக்குவாதங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தேர்தலுக்கு பின் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வோம் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூற, எடப்பாடியார் தான் என்றும் முதல்வர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்
 
இதனை அடுத்து முதல்வர் வேட்பாளர் குறித்து சர்ச்சை தற்போது தேவை இல்லாதது என்றும் தகுந்த நேரத்தில் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வோம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இந்த நிலையில் முதல்வர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசிக் கொண்டிருந்ததால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் இன்று முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது இந்த ஆலோசனையின் போது முதல்வர் வேட்பாளர் யார் என விவாதம் நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது இந்த ஆலோசனைக்கு சற்றுமுன்னர் அமைச்சர் சிவி சண்முகம் கேபி முனுசாமி வைத்திலிங்கம் உள்ளிட்டோர் வருகை தந்ததாகவும் இன்னும் சில அதிமுக தலைவர்கள் வருகை தர இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது