புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 17 நவம்பர் 2018 (11:34 IST)

வாயைவிட்டு மாட்டிய விஷால்: கிழித்து தொங்கவிட்ட நமது அம்மா

அதிமுக அதிகாரப்பூர்வ தொலைகாட்சியை நடிகர் விஷால் விமர்சித்ததற்கு நமது அம்மா நாளிதழ் பதிலடி கொடுத்துள்ளது.
அதிமுகவின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியாக இருந்த ஜெயா டிவி தற்போது டிடிவி தினகரன் வசம் சென்றுவிட்டதால், அதிமுக அதிகாரபூர்வ சேனாலாக 'நியூஸ் ஜெ' என்ற தொலைக்காட்சி சமீபத்தில் தொடங்கப்பட்டது.
 
இதுகுறித்து நடிகர் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தி சேனல் ஆரம்பிக்க நிறைய செலவாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் மாத சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ, எம்.பிக்கள் எப்படி இது போன்ற ஒரு வியாபார அமைப்பை தொடங்க முடிகிறது? 2019-க்காக காத்திருக்கின்றேன்" என்று மறைமுகமாக நியூஸ் ஜெ தொலைக்காட்சியை தாக்கி விமர்சனம் செய்தார். அ.தி.மு.க நாளேடான நமது அம்மா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
 
அதில் நாட்டு மக்கள் அனைவரும், அதிமுகவை பாராட்டி வரும் நிலையில் ஒரு ‘வி‌ஷமப்பயல்’ மட்டும் வன்மத்தை கக்குகிறான். தொடர் தோல்விகளை கொடுக்கும் அந்த நடிகர் கணக்கு கேட்கவேண்டியது எங்களிடம் அல்ல, உன்னை தூண்டிவிடும் டோக்கன் மன்னனிடம் தான்.
 
முதலில் நீ உன் துறையில் சரியாக இருக்கிறாயா? தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து 7 கோடி ரூபாயை காணோம்னு சொல்றாங்க? அத என்ன பண்ண? நீயெல்லாம் எங்கள பத்தி பேசலாமா? போ... போ... வீட்ல யாராவது பெரியவங்க இருந்தா வரச்சொல்லு.... என விஷாலை கடுமையாக விமர்சித்திருக்கிறது நமது அம்மா நாளிதழ்.