செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 17 நவம்பர் 2018 (08:33 IST)

பெரியாரை அவமதித்த ஹெச் ராஜாவுக்குப் பதிலடி தந்த ஆ ராசா….

தன் பேச்சின் மூலம் தமிழ்நாட்டில் சர்ச்சை மற்றும் பரபரப்பான சூழ்நிலையை தொடர்ந்து உருவாக்கி வரும் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார்.
 

வாயைத் திறந்தாலே எதாவது உளறல், பேஸ்புக், டிவிட்டரில் யார் மீதாவது அவதூறு என தன்னை எப்போதும் அரசியல் வெளிச்சத்தில் வைத்துக் கொள்பவர் ஹெச் ராஜா. இவர் பேசினால் எதாவது செய்தி கிடைக்குமென ஊடகங்களும் அவர் செல்லும் இடமெல்லாம் சென்று அவரது கருத்துகளைக் கேட்டு வருகின்றனர். அதுபோல, சமீபத்தில், அரியலூரில் பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்ற எச்.ராஜா செய்தியாளர்களிடம் பின்வருமாறு பேசினார்,

‘தமிழ்நாட்டிலேயே ஒன்றுக்கும் உதவாமல், தண்டத்திற்கு இருக்கும் ஒரே துறை இந்து அறநிலைத்துறைதான்.ஈ.வே.ரா, மணியம்மை பாடத்திட்டத்தை பற்றி படித்த குழந்தைகள் ஒழுக்கமாக இருக்குமா? இந்த பாடத்திட்டதை புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும். பெரியார் - மணியம்மை குறித்த பாடங்களை படிக்கும் குழந்தைகள் எப்படி ஒழுக்கமாக வளரும். ஒரு வயதானவர் ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்வதை ஏன் தடுக்கவில்லை என்று குழந்தை கேட்டால் அதற்கு என்ன பதில் உள்ளது? எனவே பெரியார் குறித்த பாடங்களை புத்தகங்களில் இருந்து நீக்கினாலே எல்லாமே சரியாகிவிடும் என கூறியுள்ளார்.’ என கூறியிருந்தார்.

இதற்குப் பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வந்து கொண்டிருக்கையில் திமுக வின் கொள்கை பரப்பு செயலாளர் ஆ ராசா காரசாரமான பதிலடி கொடுத்துள்ளார். அவர் ‘பிரம்மன் திலோத்தமை மீதும், சிவன் தாருகாவனத்து ரிஷி பத்தினிகள் மீதும், இந்திரன் அகலிகை மீதும், சந்திரன் குரு பத்தினி தாரை மீதும், விஷ்ணு சந்திரன் மனைவி மீதும் கொண்ட காட்டுமிராண்டித்தனமான கள்ள காமக் களியாட்டங்களை கொண்டாடும் எச் ராஜாவுக்கு மதப் புரிதலும் இல்லை, மனிதப் புரிதலும் இல்லை’ என எதிர்வினையாற்றியுள்ளார்.