திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 2 மே 2021 (09:06 IST)

கருத்துக்கணிப்புகள் பொய்யா? முன்னிலையில் அதிமுக

தமிழகத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பெரும்பாலும் அதிமுக வெற்றி பெறும் என்று கூறியது. அதுமட்டுமன்றி திமுகவுக்கு 190 தொகுதிகள் கிடைக்கும் வரை பல கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன 
 
அதிமுகவுக்கு 50 முதல் 60 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது முடிவுகள் வந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது திமுகவும் அதிமுகவும் கிட்டத்தட்ட சம அளவில் முன்னிலை வகித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
இதுவரை வந்த தகவலின்படி திமுக 37 இடங்களிலும் அதிமுக 30 தொகுதிகளிலும் முன்னிலை வைக்கிறது. அதேபோல் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 31 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
தற்போது வெளிவந்திருக்கும் தகவலை வைத்து பார்க்கும்போது கருத்துக்கணிப்புகள் அனைத்துமே கிட்டத்தட்ட பொய்யாகவே இருக்கும் என தெரிகிறது. அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டுமே ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு முன்னிலை வகித்து வருவது தேர்தல் முடிவுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது