1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 2 மே 2021 (08:51 IST)

திமுகவை நெருங்கியது அதிமுக: இயந்திர வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கிய நிலையில் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணத்தொடங்கிய பின் தற்போது இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன 
 
தபால் ஓட்டுகளில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணத்தொடங்கியவுடன் அதிமுகவும் வேகமாக முன்னேறி வருகிறது 
 
சற்று முன் வெளியான தகவலின் படி அதிமுகவும் பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவது கருத்துக்கணிப்புகளை பொய்யால்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
சற்றுமுன் வெளியான தகவலின்படி திமுக 18 தொகுதிகளிலும் அதிமுக 14 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இதே ரீதியில் சென்றால் அதிமுக திமுக இடையே ஆட்சியை பிடிப்பது கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது