வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 28 மார்ச் 2023 (11:23 IST)

பொதுச்செயலாளராக பதவியேற்றார் ஈபிஎஸ்.. தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் அதிரடி..!

அதிமுக பொது செயலாளர் குறித்த வழக்கின் தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அலுவலகம் சென்று பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார் 
 
அதிமுக பொதுச்செயலாளர் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியான நிலையில் அதிமுக பொது குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்றும் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது. 
 
இதனை அடுத்து தீர்ப்பு வந்த சில நிமிடங்களில் பொதுச்செயலாளர் சான்றிதழை தேர்தல் ஆணையாளர்கள் நத்தம் விசுவநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி இடம் வழங்கினர். இதனை அடுத்து   எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார். 
 
பொதுச்செயலாளர் ஆனதன் மூலம் அதிமுகவின் அனைத்து அதிகாரங்களும் எடப்பாடி பழனிசாமி வசம் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பின்னர் அனைத்து தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் உள்ள அனைத்து தொண்டர்களாலும் பொதுச் செயலாளராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.
 
Edited by Siva