திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 5 ஜூலை 2021 (19:09 IST)

ஜூலை 9ல் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்: முக்கிய ஆலோசனையா?

ஜூலை 9-ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அதில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்
 
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு சலசலப்புகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சசிகலா தினமும் ஒரு ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். மேலும் அதிமுகவின் உள்ள ஒருசில தலைவர்கள் திமுகவுக்கு கட்சி தாவல் இருப்பதாகவும் வதந்தி வருகிறது 
 
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல், சசிகலா ஆடியோ விவகாரம் உள்பட முக்கிய ஆலோசனை செய்வதற்காக ஜூலை 9ல் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தை கூட்டி உள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக தலைவர்கள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு ஓபிஎஸ் இபிஎஸ் இணைந்து செய்தியாளர்களைச் சந்திப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது