இயக்குநர் ஷங்கரை சந்தித்த முன்னணி நடிகர் !

sinoj| Last Updated: திங்கள், 5 ஜூலை 2021 (18:55 IST)

இயக்குநர் ஷங்கரை தெலுங்கு முன்னணி நடிகர் சந்தித்துப் பேசியுள்ளார். இது கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்,
கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்க உள்ளார்.


இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி யார் என்பது அறிவிக்கப்படாத நிலையில் இப்போது கியாரா அத்வானி மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் பெயர் அடிபட்டு வந்தது. இந்நிலையில் இப்போது கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லைகா உடனான பிரச்சனைகளை முடித்துவிட்டு ஷங்கர் ராம்சரண் தேஜாவின் படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் மற்றொரு அப்டேட்டை படக்குழு சார்பாக வெளியிட்டுள்ளனர். அதில் இந்த படத்துக்காக இசையமைப்பாளராக எஸ் எஸ் தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.


இந்நிலையில், ராம்சரணின் 15 வது படத்தை ஷங்கர் இயக்கவுள்ளதால் இப்படத்தின் ஆரம்பக் கட்டப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நடிகர் ராம் சரண் இயக்குநர் ஷங்கரை சென்னையில் சந்தித்துப் பேசியுள்ளார். இப்படம் குறித்து இருவரும் ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோசன் போஸ்டர் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்

இதில் மேலும் படிக்கவும் :