1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated: செவ்வாய், 3 ஜனவரி 2023 (19:04 IST)

வெளியில் இருந்து உணவுகளை தியேட்டருக்கு கொண்டு வரலாமா? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

theater
வெளி உணவுகளை தியேட்டருக்கு கொண்டு வரலாமா என்று பதிவு செய்யப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
திரையரங்குகளில் சுத்தமான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டும் என்றும் வெளி உணவுகளுக்கு தடை விதிக்க திரையரங்கு உரிமை உண்டு என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது 
 
வெளி உணவுக்கு தடை விதிக்க முடியாது என்ற காஷ்மீர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டில் மனுவில் இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ளது 
ஆனால் அதே நேரத்தில் குழந்தைகளுக்காக கொண்டுவரப்படும் உணவை மட்டும் தியேட்டர் நிர்வாகம் அனுமதிக்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. 
 
இதனை அடுத்து நாடு முழுவதும் வெளி உணவுகளை தியேட்டருக்கு கொண்டு செல்ல முடியாது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva