Daily Horoscope
✕

தடுப்பூசி போட்டும் விடாத கொரோனா! அதிமுக வேட்பாளருக்கு கொரோனா!

Written By Prasanth Karthick
Updated: வியாழன், 1 ஏப்ரல் 2021 (13:24 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகள் விருவிருப்பாக நடைபெற்று வரும் நிலையில் அதிமுக வேட்பாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் திருச்சி உறையூர் அதிமுக வேட்பாளர் இந்திராகாந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இந்திராகாந்தியின் கணவர் தங்கமணிக்கு கொரோனா உறுதியானதால் வேட்பாளட் இந்திராகாந்தி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்நிலையில் தற்போது இந்திராகாந்திக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. திருச்சியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் இந்திரா காந்தி 7 அதிமுக கூட்டணி வேட்பாளர்களுடன் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

அர்ஜூன் தொடர்ந்த வழக்கு!.. பயில்வான் ரங்கநாதன் கைதாவாரா?....

எல்லாம் பகல் வேஷமா?!.. விளைவு மோசமாக இருக்கும்!.. விஜயை எச்சரித்த நயினார் நாகேந்திரன்..

அதள பாதாளத்திற்கு சென்ற இந்திய பங்குச்சந்தை.. சென்செக்ஸ் சுமார் 1500 புள்ளிகள் சரிவு...

அன்பில் மகேஷை பார்க்க வந்த கனிமொழி எம்பி.. புழல் சிறையில் பரபரப்பு...

திருமண மோசடி புகார்.. தலைமறைவான முத்துக்குமரனை தேடும் போலீஸ்...

அடுத்த கட்டுரையில்
Show comments