செவ்வாய், 17 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 29 மார்ச் 2024 (10:57 IST)

கண்ணுக்கெட்டிய வரை எதுவுமே தெரியவில்லை: மதுரை எம்பி சு வெங்கடேசன் குறித்து அதிமுக வேட்பாளர்..!

மதுரையில் லோக்சபா தொகுதிகள் போட்டியிடும் அதிமுக வேட்பாளர், மதுரை எம்பி சு வெங்கடேசன் இந்த பகுதியில் செய்துள்ள பணிகள் குறித்து பைனாகுலர் கொண்டு பார்க்க வந்துள்ளேன், ஆனால் அவர் செய்த எதுவுமே என் கண்களுக்கு தெரியவில்லை என தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் அதிமுக சார்பில் சரவணன், கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெங்கடேசன், பாஜக சார்பில் ராம சீனிவாசன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சத்தியதேவி ஆகியோர் போட்டியிடுகின்றனர்

இங்கு அதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை இடையே தான் கடும் போட்டி இருப்பதாக தேர்தல் களத்தில் இருந்து தெரியவந்துள்ளது. இந்நிலையில் சு வெங்கடேசன் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணன் கேலியாக ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்
 
அதில் அவர் பைனாகுலரை பார்ப்பது போன்ற புகைப்படத்தை பதிவு செய்து மதுரை எம்பி சு வெங்கடேசன் இங்கு செய்த பணிகளை பார்க்க பைனாகுலர் கொண்டு வந்தேன், ஆனால் அவர் செய்த எதுவுமே என் கண்களுக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran