புதன், 9 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 6 மார்ச் 2024 (11:21 IST)

சந்திராயன் செல்ல 41 நாள்.. ஆனால் நன்கொடையாளர்கள் பெயரை கொடுக்க 140 நாளா? சு வெங்கடேசன்

பூமியிலிருந்து சந்திரனுக்கு சந்திராயன் செல்லவே 41 நாள் என்ற நிலையில் மும்பையில் இருந்து டெல்லி சென்று நன்கொடையாளர்களின் பெயரை கொடுப்பதற்கு 140 நாளா? என்று மதுரை எம்பி சு வெங்கடேசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தேர்தல் பத்திரம் வழக்கில் நன்கொடையாளர்களின் பெயர்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த விவரங்களை கொடுக்க 140 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் எஸ்பிஐ வங்கி கால அவகாசம் கேட்டு இருந்தது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து மதுரை எம்பி சு வெங்கடேசன் தனது சமூக வலைதளத்தில் கூறி இருப்பதாவது:

சந்திராயன் நிலவுக்கு செல்ல 41 நாள் ஆனது.
அது நவீன அறிவியலின் சாதனை.

மும்பையிலிருக்கும் எஸ்பிஐ டில்லியிலிருக்கும் உச்சநீமன்றத்தில் நன்கொடையாளர்களின் பெயரை கொடுக்க 140 நாள் கேட்கிறது. இது நவீன ஊழலின் சாதனை.

48 கோடி வாடிக்கையாளர்களின் நம்பிக்கை எஸ்பிஐ . இனி பின்னொட்டாக #ModiKaParivar ஐ இணைத்துக் கொள்ளட்டும்.

Edited by Mahendran