1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 27 மார்ச் 2024 (19:09 IST)

பாதியில எழுந்து போனா, ரத்தம் கக்கி சாவீங்க!’: செல்லூர் ராஜூ போட்ட மந்திரம்..!

நான் பேசும் போது யாராவது எழுந்து சென்றால் அவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள் என்று காமெடியாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில் மதுரையில் இன்று செல்லூர் ராஜு தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேச வந்த உடனே நான் பேசிக் கொண்டிருக்கும் போது தயவு செய்து யாரும் எழுந்து செல்லாதீர்கள், அவ்வாறு எழுந்து சென்றால் ரத்த கக்கி சாவீர்கள் என்று சிரித்துக்கொண்டே காமெடியாக சொன்னார்.

நான் பேசுவதற்கு முன் எழுந்து சென்றால் பரவாயில்லை, ஆனால் நான் பேசும்போது யாரும் எழுந்து செல்லக்கூடாது, இப்பொழுதுதான் நான் ஒரு மந்திரவாதியை சந்தித்து மந்திரம் போட்டு வந்துள்ளேன், அந்த மந்திரவாதியிடம் நான் பேசும்போது யாராவது எழுந்து சென்றாலும் அவர்கள் ரத்தம் கக்கி சாகும் படி செய்து விடுங்கள் என்று கூறிவிட்டு தான் வந்திருக்கிறேன் என்று அவர் சிறிது கொண்டே காமெடியாக கூறினார்.

அதன் பிறகு அவர் திமுக அரசையும் பாஜகவையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran