1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Petrol diesel price hiked

உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை!

பெட்ரோல்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுவதால் இன்றும் இதன் விலை அதிகரித்துள்ளது. 

 
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து சமையல் கேஸ் சிலிண்டரும் விலை உயர்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் எழுந்துள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.93.11 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.86.45 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
ரஜினி - கமலுக்கு தூது விட்ட சரத்: கூட்டணி பலம்பெறுமா?