1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 ஜனவரி 2022 (17:33 IST)

பாஜகவுடன் கூட்டணி முறிகிறதா? ஓபிஎஸ், ஈபிஎஸ் முக்கிய ஆலோசனை!

கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்துக் கொண்ட நிலையில் தற்போது அந்த கூட்டணி முறிந்து விடும் நிலையில் இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அதிமுக தலைமை அலுவலகத்தில் தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தலைமையில் பாஜக வுடன் கூட்டணி தொடர்வது குறித்து ஆலோசனை நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
சமீபத்தில் நயினார் நாகேந்திரன் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து காரணமாக அதிமுக பாஜக கூட்டணி முறிந்து விடும் நிலையில் இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி உள்ள கட்சிகள் குறித்த விவரம் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது