வெள்ளி, 10 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva

ஏசி பெட்டியில் பயணம் செய்த பயணிக்கு கசப்பான அனுபவம்.. ரயில்வே துறை நடவடிக்கை எடுக்குமா?

train
இந்திய ரயில்வேயின் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியில் பயணம் செய்த பயணி ஒருவர், தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 
 
சூரத்திலிருந்து தாகோத் வரை செல்வதற்காக 2,000 ரூபாய் செலுத்தி உறுதி செய்யப்பட்ட சீட்டுகளை அவர் வாங்கியிருந்தார். ஆனால், திருமண விழாவிற்கு சென்று திரும்பிய ஒரு கும்பல், வெறும் இரண்டு டிக்கெட்டுகளை வைத்துக்கொண்டு 25-க்கும் மேற்பட்ட மூட்டைகளுடன் அந்த பெட்டியை ஆக்கிரமித்துள்ளது.
 
இருக்கைகளை ஆக்கிரமித்த அந்த கும்பல், மற்ற பயணிகளிடம் "தயவுசெய்து ஒத்துழையுங்கள்" என்று கூறி அராஜகம் செய்துள்ளனர். இதனால் அந்த பயணி தனது குழந்தைகளை மடியில் அமரவைத்து ஐந்து மணி நேரம் சிரமத்துடன் பயணம் செய்துள்ளார். அங்கு வந்த டி.டி.இ இதை பார்த்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். 
 
கூடுதல் கட்டணம் செலுத்தி ஏசி வகுப்பில் பயணம் செய்வது சௌகரியத்திற்காகத்தான், ஆனால் இங்கும் பொதுப்பெட்டி போன்ற நிலை நீடித்தால் ஏன் பணம் செலுத்த வேண்டும்?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இச்சம்பவம் குறித்து நெட்டிசன்கள் 'ரயில் மதாத்' செயலியில் புகார் அளித்திருக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva