செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 8 மார்ச் 2021 (12:31 IST)

குறையும் அதிமுக பலம்; ஸ்டாலின் காட்டில் அடைமழை!!

குறையும் அதிமுக பலம்; ஸ்டாலின் காட்டில் அடைமழை!!
சட்டப்பேரவைத் தேர்தலில் தமிமுன் அன்சாரி திமுகவுக்கு ஆதரவு என தகவல் வெளியாகியுள்ளது. 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் அதிமுக ஆதரவு நிலைபாட்டிலிருந்து மாறியுள்ள கருணாஸ் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
 
இவரைத்தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலில் தமிமுன் அன்சாரி திமுகவுக்கு ஆதரவு என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.