1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 9 ஜூலை 2021 (20:52 IST)

அஇஅதிமுகவின் 50 - ஆம் ஆண்டு பொன்விழா: சிறப்பு தீர்மானம்!

அஇஅதிமுகவின் 50ஆம் ஆண்டு பொன்விழாவை சிறப்பாக கொண்டாடுதல் குறித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:
 
ஏழை, எளிய மக்கள்‌ வாழ்க்கையில்‌ பல உயரங்களைத்‌ தொட வேண்டும்‌ என்பதற்காகவும்‌, தீய சக்தியிடமிருந்து இந்த நாட்டையும்‌, மக்களையும்‌ காப்பாற்ற வேண்டும்‌ என்ற உயரிய நோக்கத்திற்காகவும்‌, இதய தெய்வம்‌ பொன்மனச்‌ செம்மல்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. அவர்களால்‌ 16 லட்சம்‌ தொண்டர்களோடு தொடங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌, மாண்புமிகு அம்மா அவர்களின்‌ அயராத உழைப்பால்‌ ஒன்றரைக்‌ கோடித்‌ 'தொண்டர்களைக்‌ கொண்ட மிகப்‌ பெரிய இயக்கமாக, எஃகுக்‌ கோட்டையாக தற்போது 50-ஆவது ஆண்டு பொன்விழாவில்‌ அடியெடுத்து வைக்கிறது.
 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ பொன்விழா ஆண்டை சீரோடும்‌, சிறப்போடும்‌, எழுச்சியோடும்‌ தமிழகம்‌ மட்டுமல்லாமல்‌, கழகம்‌ செயல்பட்டு வரும்‌ பிற மாநிலங்களிலும்‌, பார்‌ போற்றும்‌ பெருவிழாவாக, மிகு விமரிசையாக, மக்கள்‌ நலத்‌ திட்டங்கள்‌ பலவற்றை வழங்கிக்‌ கொண்டாட இக்கூட்டம்‌ தீர்மானிக்கிறது.