ஜப்பானில் அவசரநிலை பிரகடனம்...ஒலிம்பிக் போட்டிகள்?

Tokyo Olympics
sinoj| Last Modified வெள்ளி, 9 ஜூலை 2021 (17:53 IST)

உலக புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளன. கடந்த ஆண்டே நடத்தப்படவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால் இந்த மாதம் 23ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 5 வீரர்கள் உட்பட இந்தியா முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக இந்திய ஒலிம்பிக் வீரர்கள், வீராங்கனைகள் ஜூலை 17ம் தேதி ஜப்பான் புறப்படுகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஜப்பான் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, ஜப்பான் நாட்டில் கோவிட் எனும் கொரொனா தொற்றுப் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் வரும் 12 ஆம் தேதி முதல் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஒலிம்பிக் போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
மக்கள் இப்போட்டிகளை தொலைக்காட்சிகள் கண்டு ரசிக்கலாம்.இதில் மேலும் படிக்கவும் :