ஒரே நாளில் 33 அதிமுக வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல்.. ஈபிஎஸ் திட்டம் என்ன?
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அதிமுக 33 தொகுதிகளிலும், தேமுதிக ஐந்து தொகுதிகளிலும், எஸ்டிபிஐ ஒரு தொகுதியிலும் போட்டியிடும் நிலையில் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டது என்பதும் இன்று முதல் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்க உள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி அதிமுகவின் 33 வேட்பாளர்களும் நாளை ஒரே நாளில் அவரவர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாளை அதிமுகவின் அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளதாகவும் இதனை அடுத்து நாளை காலை ஒரே நாளில் ஒரே நேரத்தில் அனைத்து வேட்பாளர்களும் தாக்கல் செய்வார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சூறாவளி பிரச்சாரத்தை ஆரம்பித்து உள்ள எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் அவரது பிரச்சார ஏற்பாடுகளை அதிமுகவின் நிர்வாகிகள் கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Edited by Siva