ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜரான கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை

karthi
சிபிஐ முன் ஆஜரான கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
 
சீனர்களுக்கு விசா கொடுக்க லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மே 30-ஆம் தேதி வரை தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது
 
இந்த நிலையில் நேற்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிய கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியானது
 
 சமீபத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என கார்த்தி சிதம்பரத்திற்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அவர் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கப்பட்டது குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்
 
இந்த விசாரணை பலமணிநேரம் நடந்ததாக கூறப்படும் நிலையில் இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரிய நிலையில் கார்த்தி சிதம்பரத்தை 30ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது