1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 23 மே 2022 (19:08 IST)

ப.சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் வேறு வேறு குடும்பம்: கே.எஸ்.அழகிரி

ks alagiri
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவரும் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தமிழக காங்கிரஸ் தலைவரும் கேஎஸ் அழகிரி விளக்கமளித்துள்ளார்
 
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என தீர்மானம் இயற்றப்பட்டது. இந்த தீர்மானம் குறித்து விளக்கமளித்த கே எஸ் அழகிரி கார்த்தி சிதம்பரத்திற்கு திருமணம் ஆகிவிட்டதால் அவர் வேறு குடும்பம் என்ரும், அதனால் ப சிதம்பர்ம மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவருக்கும் பதவி அளித்ததில் எந்தவிதமான விதி மீறலும் இல்லை என்றும் கூறினார்.
 
 ஆனால் அதே சமயத்தில் சோனியாகாந்தி ராகுல்காந்தி ஒரே குடும்பமாக இருக்கும் நிலையில் அவர்களில் ஒருவருக்கு மட்டுமே பதவி வழங்கப்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது