வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 29 மே 2024 (09:17 IST)

தமிழகத்தில் வாக்குகள் எண்ணும் பணி.. கூடுதலாக உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம்..!

Election Commision
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் வாக்குகள் எண்ணும் பணி ஜூன் நான்காம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் கூடுதலாக தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஜூன் நான்காம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை கூடுதலாக நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து அரசிதழில்  வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வாக்கு எண்ணும் பணிகளில் எந்த விட குறையும் ஏற்படக்கூடாது என்பதற்காக கூடுதல் உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது

அனைத்து அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள் ஒவ்வொரு வாக்குப்பதிவு இயந்திரத்தையும் சரி பார்த்து அதன் பின் வாக்குகள் எண்ணும் பணியை தொடர்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva