ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 28 மே 2024 (06:27 IST)

இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்: மம்தா பானர்ஜி திட்டவட்டம்

பாஜகவை வீழ்த்த வேண்டும் என என்ற நோக்கத்தோடு இந்தியா முழுவதிலும் உள்ள முக்கிய கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி என்ற மெகா கூட்டணியை ஆரம்பித்த நிலையில் அந்த கூட்டணி ஆரம்பத்தில் இருந்தே சொதப்பி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக இந்த கூட்டணியை ஆரம்பிக்க முக்கிய காரணமாக இருந்த நிதீஷ் குமார் திடீரென அந்த கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைந்தார். அதேபோல் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க மறுத்தது. அதேபோல் கேரளாவில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிரெதிராக போட்டியிட்டன என்பதும் குறிப்பாக ராகுல் காந்திக்கு எதிராகவே கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி இந்தியா கூட்டணி ஒரு முக்கிய கூட்டத்தை நடத்த திட்டமிட்டு இருக்கும் நிலையில் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் இந்த கூட்டணிக்கு கலந்து கொள்ள தமிழக முதல்வர் உள்பட இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் என்னால் கலந்து கொள்ள முடியாது என்றும் அன்றைய தேதியில் மேற்கு வங்கத்தில் சில தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கப்போகிறது என்றும் மேலும் புயல் நிவாரண பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அதை விட்டுவிட்டு எப்படி என்னால் கூட்டத்திற்கு செல்ல முடியும் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இருப்பினும் மம்தாவை  தவிர மற்ற தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Siva