வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 31 ஜனவரி 2021 (14:19 IST)

சசிகலா ஆட்டம் ஆரம்பம்: தமிழ் நடிகை டுவீட்!

சசிகலா ஆட்டம் ஆரம்பம்: தமிழ் நடிகை டுவீட்!
சசிகலா ஆட்டம் ஆரம்பம் ஆகி விட்டதாக தமிழ் நடிகை ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 27ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையான நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்
 
அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய காரில் அதிமுக கொடி பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தொடர்ந்து இருப்பார் என்றும் இது குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதாக அவர் அதிமுக கொடியை பயன்படுத்துவதில் எந்த ஒரு தவறும் இல்லை என்றும் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த நிலையில் சசிகலாவின் ஆட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது என்று நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். நான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு ஆட்டம் ஆரம்பம் சசிகலா என்று அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த ட்விட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது