திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (12:02 IST)

நீண்ட உறக்கத்தில் இருக்கும் ஸ்டாலினை யாராவது எழுப்புங்கள: குஷ்பு விமர்சனம்

kushboo

நீண்ட உறக்கத்தில் இருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினை யாராவது எழுப்பி விடுங்கள் என பாஜக பிரபலம் மற்றும் நடிகை குஷ்பு கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினை பாஜக தலைவர்கள் அவ்வப்போது விமர்சனம் செய்து வரும் நிலையில் நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் சற்றுமுன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 
 
கோவை நீதிமன்றம் அருகே பட்டப்பகலையில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரற்ற நிலையில் உள்ளது. நீண்ட உறக்கத்தில் இருக்கும் முதலமைச்சர் எழுப்பி இதுகுறித்து விளக்கம் அளிக்க சொல்லுங்கள்’ என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவுக்கு கடும் விமர்சனங்கள் ஏற்பட்டுள்ளன.
 
Edited by Mahendran