வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 பிப்ரவரி 2023 (15:21 IST)

கொலை நகரமாகி வரும் கோவை: அண்ணாமலை ஆவேசம்

Annamalai
கோவை நகரம் கொலை நகரமாகிக் கொண்டிருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசமாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
கோவையில் பொதுமக்கள் முன்னிலையிலும், நீதிமன்ற வளாகத்திலும் நேற்று மட்டும் இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அது மட்டுமல்லாது, துப்பாக்கிக் கலாச்சாரமும் தலையெடுத்துள்ளது.
 
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளைச் சம்பவங்கள் மாநிலம் முழுவதும் அதிகரித்திருக்கின்றன. 
 
காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. 
 
ஒட்டு மொத்த அமைச்சர்களையும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிக்கு அனுப்பிவிட்டு, பொதுமக்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உண்டாக்கி, அதில் தமிழகத்தைத்  தள்ளியிருக்கிறது திறனற்ற திமுக அரசு.
 
உடனடியாக, தமிழக முதல்வர், அரசின் அடிப்படைக் கடமையான சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தி, பொதுமக்கள் அச்சமின்றி வாழ கடுமையான  நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன். 
 
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 

Edited by Mahendran