செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: புதன், 18 டிசம்பர் 2019 (19:25 IST)

’வாயில் ஹாரன் ’வாசிக்கும் இளைஞர் ? ஆனந்த் மகேந்திரா வெளியிட்ட வைரல் வீடியோ...

’வாயில்  ஹாரன் ’வாசிக்கும் இளைஞர் ?  ஆனந்த் மகேந்திரா வெளியிட்ட வைரல்  வீடியோ...
பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா என்பவர்,  தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ’இவர் இந்தியாவுக்கு கிடைத்துள்ள ஒரு திறமைசாலி’ என்று ஒரு நபரைக் குறித்து பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ஒரு இளைஞர் பேருந்தில் ஒலிக்கும் ஹாரன் போன்று தன் வாயில் இருந்து ஹாரன் ஒலியை தத்ரூபமாக ஒலி எழுப்புகிறார். ஒரிஜினலாகவே அது பேருந்தின் ஹாரன் ஒலியைப் போன்றுள்ளதாக அந்த வீடியோவை பார்ப்பவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில்  வைரல் ஆகி வருகிறது.